Oppo Reno 5 Pro அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம்

 Oppo நிறுவனம் இன்று இந்தியாவில் Oppo Reno 5 Pro என்கிற புதிய ஸ்மார்ட்போனை அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. வருகிற ஜனவரி 22ஆம் தேதி இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.

Oppo Reno 5 Pro 5G

ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.55இன்ச் கொண்ட FHD+ OLED டிஸ்பிளேவுடன் வருகிறது மேலும் இதில் Punch hole notch இடம்பெற்றுள்ளது. இந்த Punch hole notch 32MP f2.4  செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 64MP f1.7 (wide) + 8MP f2.2 (Ultra wide) + 2MP (Back & white) + 2MP (Macro). பின்பக்கம் இருக்கிற கேமரா 4K 30fps வரை வீடியோ எடுக்கும் மேலும் இதில் AI Highlight video என்கிற புதிய சிறப்பம்சம் இடம் பெற்றுள்ளது இது இரவு நேரத்தில் வீடியோ எடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.

Mediatek Dimensity 1000+ 5G Soc உடன் இந்தியாவில் விற்பனைக்கும் வரும் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமை Reno 5 Proக்கு இருக்கிறது. இது Mediatek நிறுவனத்தின் flagship 5G Processor என்பது குறிப்பிடத்தக்கது.

Oppo Reno 5 Pro 5G ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4350mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இது 65W அதிவேக சார்ஜ் உதவியுடன் அறிமுகமாகியுள்ளது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையான Color Os 11.1ல் இயங்குகிறது பல புதிய சாப்ட்வேர் சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

Indisplay fingerprint sensor மற்றும் face unlock இரண்டும் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது மேலும் இது பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

173g எடையுடன் இந்த மொபைல் வருகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகையான கலர்களில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது (Astral Blue, Starry Black).

Rs:35,990 என்கிற விலையில் இந்த ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகியுள்ளது. வருகிற ஜனவரி 22 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

C
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.