Samsung Galaxy S20+ VS Oneplus 8 Pro தமிழில்

வணக்கம் தமிழன் டெக்னிக்கல் குடும்ப நண்பர்களே இன்று நாம் Samsung Galaxy S20+ மற்றும் Oneplus 8 Pro இரண்டில் எந்த ஸ்மார்ட்ப்போன் சிறந்தது என்பதை பார்ப்போம்.

Display:

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் Dynamic Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் 120HZ refresh rate மற்றும் QHD+ resolution உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்போனில் HDR 10+ மற்றும் Corning Gorilla Glass V6 இருக்கிறது.

ஒன்பிளஸ் 8 Pro மொபைலில் 6.78இன்ச் fluid Amoled டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 120HZ refresh rate மற்றும் QHD+ resolution உடன் வருகிறது. ஒன்பிளஸ் 8 Pro ஸ்மார்ட்ப்போனில் HDR 10+ மற்றும் Corning Gorilla Glass இருக்கிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளேவில் எது நன்றாக இருக்கும்?. சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்போனில் இருக்கும் Dynamic Amoled டிஸ்பிளே தான் நன்றாக இருக்கு என்பது சந்தேகமில்லை ஆனால் Oneplus 8 Pro மொபைல் 120HZ refresh rate QHD+ resolutionல் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போன் 120HZ refresh rate FHD+ resolution மட்டுமே வேலை செய்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு Software Update மூலமாக 120HZ refresh rate QHD+ resolution வேலை செய்யும் என்று சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Camera:

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ மொபைலில் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 12 MP, f/1.8, 26mm (wide) Dual Pixel PDAF, OIS + 
64 MP, f/2.0, (telephoto) PDAF, OIS, 3x hybrid optical zoom + 
12 MP, f/2.2, 13mm (ultrawide), Super Steady video +
0.3 MP, TOF 3D, f/1.0, (depth). முன்பக்கம் இருக்கும் Punch hole notch  10 MP, f/2.2, 26mm (wide) செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 Pro மொபைலிலும் பின்பக்கம் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48 MP, f/1.8, 25mm (wide‌)  omni directional PDAF, Laser AF, OIS + 
8 MP, f/2.4, (telephoto) PDAF, OIS, 3x optical zoom + 48 MP, f/2.2, 13mm (ultrawide) PDAF + Color filter sensor. முன்பக்கம் இருக்கிற Punch hole notch 16MP f2.5 செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எந்த கேமரா நன்றாக இருக்கும்? சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போனின் கேமரா தான் தாறுமாறு முக்கியமாக இந்த மொபைலின் Telephoto lens வேற லெவல் மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்போன் 8K @24fps வரை வீடியோ எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 8 Pro மொபைலின் கேமராவும் ஒரு நல்ல கேமரா தான்.

Processor:

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Exynos 990 SoC இடம் பெற்றுள்ளது. இது ஒரு 5ஜி chipset என்பது குறிப்பிடத்தக்கது.

Oneplus 8 Pro ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 865 Soc இடம் பெற்றுள்ளது. இது ஒரு 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன்களில் ஏது அதிக சக்தி வாய்ந்தது? Oneplus 8 Pro ஸ்மார்ட்ப்போன் தான் சக்தி வாய்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Battery:

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போனில் 4500mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 25W fast charging adopter உடன் வருகிறது. இந்த மொபைல் 15W wireless charging support செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Oneplus 8 Pro ஸ்மார்ட்ப்போனில் 4510mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 30W fast charging adopter உடன் வருகிறது. இந்த மொபைல் 30W wireless charging support செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் உபயோகித்த வரை சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போன் சார்ஜ் கொஞ்சம் சீக்கிரமாக தான் இறங்குகிறது ஆனால் ஒன்பிளஸ் 8 Pro மொபைலின் பேட்டரி எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

OS:

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போனின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான One UI 2.0 இயங்குகிறது.

Oneplus 8 Pro மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Oxygen OS 10 இயங்குகிறது.

Security:

Samsung Galaxy S20+ மொபைலில் IP68 மற்றும் Ultrasonic Indisplay fingerprint sensor இடம்பெற்றுள்ளது.

Oneplus 8 Pro மொபைலில் IP68 மற்றும் Indisplay fingerprint sensor இடம் பெற்றுள்ளது.

இந்த இரண்டில் எது பாதுகாப்பானது?
சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போனில் இருக்கும் Ultrasonic Indisplay fingerprint sensor தான் பாதுகாப்பானது.

Audio:

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Stereo speaker இடம் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போனில் மெமரி கார்டு 1TB வரை போட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Price:

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்ப்போன் இந்தியாவில் 8GB+128GB மாடல் Rs:77,900 விற்பனை செய்யப்படுகிறது.

Oneplus 8 Pro ஸ்மார்ட்ப்போன் இந்தியாவில் 8GB+128GB மாடல் Rs:54,999 என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த இரண்டில் உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகள் எதோ அந்த ஸ்மார்ட்ப்போனை வாங்கி கொள்ளுங்கள்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.