600MP கேமரா கொண்ட சாம்சங் மொபைல்

இப்போது இருக்கும் காலத்தில் அனைவரும் மொபைலின் கேமரா சென்சார் Hardware பார்க்காமல் மொபைல் எத்தனை Mega pixel கொண்டுள்ளது என்பதையே பார்க்கின்றனர்.

ஓராண்டு மூன்பு சாம்சங் நிறுவனம் தனது flagship ஸ்மார்ட்போன்களில் Mega pixel வைத்து மார்க்கெட் செய்யவில்லை. இதற்கு முன்பு சாம்சங் flagship ஸ்மார்ட்ப்போன்களில் அதிகப்பட்சமாக 12MP அல்லது 16MP கேமரா இடம்பெறும். அந்த கேமராவுக்கு நிகராக 48MP அல்லது 64MP கேமரா வராது. ஏனென்றால் அந்த 12MP கேமரா அதிசக்தி வாய்ந்த Hardware கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு Canon 80d கேமராவை எடுத்து கொள்ளுங்கள் இதில் வேறும் 24.2MP கேமரா தான் இடம்பெற்றிருக்கும் இதற்கு நிகராக தற்போது இருக்கும் 108MP மொபைல் கேமரா வராது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமராவுக்கு Mega pixel மட்டும் முக்கியத்துவம் கிடையாது. ஒரு மொபைல் கேமராவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது

 1. CCD அல்லது CMOS எந்த சென்சார் என்பதை முதலில் பார்க்க வேண்டும். இந்த இரண்டு சென்சாரும் வெளிச்சத்தின் ஒளியை கட்டுப்படுத்தும். CCD என்றால் Charge-Coupled Device என்பது அர்த்தமாகும். இந்த CCD சென்சார் குறைந்த வெளிச்சத்திலும் அருமையான புகைப்படங்களை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது மொபைல் போனில் அதிகம் இடம்பெறாது‌ ஏனெனில் CCD சென்சார் மிகவும் விலை உயர்ந்து. CMOS (Complementary Metal-Oxide Semiconductor) இதுதான் அதிகமான மொபைல்களில் இடம்பெறுகின்றது. இந்த CMOS இடம்பெறுவதுக்கு முக்கிய காரணம் பேட்டரி ஆயுள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆமாங்க பேட்டரி கம்மியாக தான் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த CMOS சென்சார்  நகரும் பொருளை வீடியோ எடுக்க முயற்சிக்கும்போது இது மிகவும் தடுமாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2. இரண்டாவதாக நாம் பார்க்க வேண்டியது சென்சார் அளவு ஆமாங்க சென்சார் பெரிதாக இருந்தால் ஃபோட்டோ அருமையாக இருக்கும். உலகிலேயே பெரிய சென்சார் கொண்ட மொபைல் என்றால் அது Panasonic Lumix CM1 தான் ஆமாங்க இந்த மொபைல் 1இன்ச் சென்சார் கொண்டுள்ளது மேலும் இதில் 2.4µm pixel size உள்ளது.

3. Full frame சென்சார் - மூன்றாவதாக நாம் பார்க்க போகிறது Full frame sensor ஆமாங்க பல மொபைல்களில் Crop image senor தான் இடம்பெற்றுள்ளன. Full frame sensor size- 35mm

4. இப்போது தான் Mega Pixelன் வேலை வருகிறது ஆமாங்க  Mega pixel அதிகமாக இருந்தால் ஃபோட்டோ தரமாக இருக்கும். அதிக மெகாபிக்சல் இருந்தால் உங்கள் படங்கள் தெளிவாக இருக்கும்.

5. F- aperture என்றால் துளை திறப்பு என அர்த்தமாகும். உதாரணத்திற்கு F1.5 இது நிறைய ஒளியை உள்ளே அனுமதிக்கிறது ஆதலால் இரவு நேரமும் நீங்கள் நல்ல போட்டோவை எடுக்கலாம். குறைந்த எஃப் எண்ணுடன் துளை இருக்கும் ஸ்மார்ட்போன்களில் ஃபோட்டோ நன்றாக இருக்காது (f2.4)

6. ISO இது மிகவும் முக்கியமானது இது இரவு நேரம் ஃபோட்டோ எடுக்க உதவும். போட்டோவை Brightஆக காட்டும்.

7. PDAF மற்றும் CDAF மிகவும் முக்கியமானதுங்க ஆமாங்க இது (Auto focus) வீடியோ மற்றும் போட்டோ எடுக்கும் போது மிகவும் உதவும். பெரும்பாலான Flagship ஸ்மார்ட்போன்களில் CDAF இருக்கிறது இது Focus ஒழுங்காக இருக்கும்.

8. ISO என்றால் Image Signal Processor என்று அர்த்தம். இது face detection சரியாக வருகிறதுக்கு உதவுதுங்க. இதே ஸ்மார்ட்போனின் SoC பொறுத்தே மாறும். ஒவ்வொரு Processor வெவ்வேறு ISP கொண்டதாக இருக்கும்.

9. Hardware எந்த அளவுக்கு அருமையாக இருக்கிறதோ அந்தளவுக்கு Software இருக்க வேண்டும் ஆமாங்க image processing மிகவும் முக்கியமானது.

இவை அனைத்தும் மனதில் கொண்டு நல்ல ஸ்மார்ட்போன்கள் வாங்குங்கள். சாம்சங் நிறுவனம் தயாரித்து வரும் 600MP கேமராவில் Auto focus நன்றாக இருந்தால் நல்லாயிருக்கும்‌.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.