அதிரடியாக விலை குறைக்கப்பட்டது Oneplus 7T Pro மொபைல்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடந்த வருட Flagship ஸ்மார்ட்ப்போனான ஒன்பிளஸ் 7T Pro மாடலுக்கு இன்று ஒன்பிளஸ் நிறுவனம் Rs:6,000 அதிரடியாக விலை குறைத்துள்ளது.

Oneplus 7T Pro Specifications:

ஒன்பிளஸ் 7T Pro ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.67 இன்ச் Amoled 90HZ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் QHD+ resolution கொண்ட Curved டிஸ்பிளே உடன் வந்துள்ளது.

ஒன்பிளஸ் 7T Pro மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP F1.6 Sony IMX 586 (wide) {OIS} + 16MP f2.2 (Ultra wide angle lens) + 8MP f2.4 (Telephoto lens) {OIS}. இந்த மொபைலில் நீங்கள் 4K@60fps வரை வீடியோ எடுக்கலாம். முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 16MP f2.0 Sony IMX 471 கேமரா உள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 855+ SoC இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Oxygen OS 10 இயங்குகிறது.

Oneplus 7T Pro மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4085mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 30W fast charging உடன் வருகிறது.

இந்த மொபைலில் நீங்கள் மெமரி கார்டு போட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 3.5mm audio jackம் இதில் கிடையாது.

இந்த மொபைல் 8GB+128GB மற்றும் 12GB+256GB என்கிற இரண்டு வகைகளில் கிடைக்கிறது. Oneplus 7T Pro Haze Blue கலரில் கிடைக்கிறது.

இந்த மொபைல் தற்போது Rs:47,999 என்ற விலையில் கிடைக்கிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.