Google Pixel 5 மொபைலில் Exynos Processor 😅😅😅😅

அடுத்ததாக வர இருக்கும் கூகுள் பிக்சல் 5 மொபைலில் எக்ஸிநோஸ் processor இடம்பெறபோவதாக புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்ப்போனான Pixel 5 ஸ்மார்ட்ப்போனுகாக சாம்சங் நிறுவனம் பிரத்தியேகமான Processor ஒன்றை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த புதிய Socக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை ஆனால் இது 5nm டெக்னாலஜியில் உருவாகும் Processor என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய Processorன் CPU பற்றி பார்க்கையில் இதில்  இரண்டு Cortex A78 core, இரண்டு Cortex A76 மற்றும் நான்கு Cortex A55 core இதுமட்டுமின்றி Samsung நிறுவனத்தின் Custom coreஆன Mangoes core இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய Processor GPU பற்றி பேசுகையில் இதில் Mali MP20 இடம் பெறுகின்றது.

இதுவரை வந்த Exynos Processor எதுவும் வெற்றியடையவில்லை. இந்த Processor Qualcomm Snapdragon 875 மற்றும் Kirin 1020க்கு போட்டியாக அமைய உள்ளது.

இந்த தகவல் உண்மையெனில் சாம்சங் நிறுவனத்தின் Exynos Processor உபயோகப்படுத்தும் நான்காவது நிறுவனம் கூகுள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.