ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனமும் கூட்டணி எதற்காக?

இன்று அதிகாலையில் நான் எனது டிவிட்டர் பக்கம் போனவுடன் ரொம்ப ஷாக் ஆகிவிட்டேன் ஆமாங்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனமும் கூட்டணி வைத்துள்ளதாக செய்தி மிகவும் பரவலானது அதனை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நிறுவனங்களும் இந்த முடிவினை எடுத்துள்ளனர். ஆமாங்க கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வருகிறதற்காக இந்த கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனமும் அனைத்து நாட்டு அரசு உதவியுடன் புதிய சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டு ஒஎஸ்களும் பயனர்களின் டேட்டாவை கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சேவையை நடைமுறைக்கு கொண்டு வர ப்ளூடூத் உதவுகிறது.

இரண்டு ஒஎஸ்களின் பயனர்கள் மொபைலில் பேசுவதை கண்காணிக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனமும் திட்டமிட்டுள்ளனர். ஆமாங்க கொரோனா வைரஸ்ஆல் பாதிக்கப்பட்டு நல்ல நிலைக்கு வந்த நபர்களுடன் பேசுவதை கண்காணிக்க போகின்றனர் ஆனால் பயனர்களின் டேட்டாவை எந்த காரணத்திற்காகவும் வெளியில் விடமாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர்.

இதற்காக புதிய API ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த API தான் அனைத்து அரசாங்களுக்கும் உதவ போகிறது. இந்த சேவை வருகிற மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நீங்கள் இந்த அப்பிளிக்கேஷனை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.