Apple Watch 6 முதல் பார்வை

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வாட்ச் 6 பற்றிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதனுடன் இதில் வர போகிற சில புதிய சுவாரசியமான அம்சங்கள் கொண்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஆப்பிள் வாட்ச் 5 வரிசை உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப்பிள் வாட்ச் 6 டிஸ்பிளே சில மாற்றங்கள் உடன் வருகிறது ஆமாங்க டிஸ்பிளே பார்க்கிறதுக்கு ஆப்பிள் வாட்ச் 5 விட அழகாக இருக்கிறது. புதிய வடிவமைப்பு தாறுமாறாக இருக்கிறது.

புதிய அம்சங்கள் என்றால் ஆப்பிள் நிறுவனம் உங்களது மன ஆரோக்கியத்தை கண்காணித்து சரியான தகவல்களை தரும் மேலும் உங்களது உடல் நலம் விவரங்கள் பற்றிய தகவல்களும் இந்த வாட்ச் 6 தரும்.

மற்றொரு சிறப்பம்சமும் ஆப்பிள் வாட்ச்ல் இடம்பெறுகின்றது. உங்கள் மன பீதியால் வரும் தாக்குதலையும் இந்த வாட்ச் கண்டுபிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த புதிய அம்சங்கள் ஆப்பிள் வாட்ச்ல் இடம்பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று  Max Weinbach கூறியுள்ளார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.