அதிரவைக்கும் விலையில் ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்ப்போன்கள்

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் 8 வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது ஆனால் விலை அன்று அறிவிக்கவில்லை தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக இந்திய விலையை அறிவித்துள்ளது.

Oneplus 8 Specifications:

ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.55 இன்ச் Amoled 90HZ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution கொண்ட flat punch hole notch உடன் வந்துள்ளது.

ஒன்பிளஸ் 8 மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP F1.75 Sony IMX 586 (wide) {OIS} + 16MP f2.2 (Ultra wide angle lens) + 2MP f2.4 (Macro lens). இந்த மொபைலில் நீங்கள் 4K@60fps வரை வீடியோ எடுக்கலாம். முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 16MP f2.0 Sony IMX 471 கேமரா உள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 865 SoC இடம் பெற்றுள்ளது. இது ஒரு 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Oxygen OS 10 இயங்குகிறது.

Oneplus 8 மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4300mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 30W fast charging உடன் வருகிறது.

இந்த மொபைலில் நீங்கள் மெமரி கார்டு போட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 3.5mm audio jackம் இதில் கிடையாது. இந்த மொபைலின் Top model Verizonல் மட்டும் IP68 Waterproof இருக்கிறது.

இந்த மொபைல் 8GB+128GB மற்றும் 12GB+256GB என்கிற இரண்டு வகைகளில் கிடைக்கிறது. Oneplus 8 மூன்று வகையான கலர்களில் கிடைக்கிறது. Onyx Black, Glacial Green & Interstellar Glow.

Oneplus 8 Pro Specifications:

ஒன்பிளஸ் 8 Pro ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.78 இன்ச் Amoled 120HZ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் QHD+ resolution கொண்ட curved punch hole notch உடன் வந்துள்ளது.

ஒன்பிளஸ் 8 Pro மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP F1.75 Sony IMX 689 (wide) {OIS} + 48MP f2.2 Sony IMX 586 (Ultra wide angle lens) + 8MP f2.4 (Telephone lens upto 30X) + Color filter sensor இந்த மொபைலில் நீங்கள் 4K@60fps வரை வீடியோ எடுக்கலாம். முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 16MP f2.0 Sony IMX 471 கேமரா உள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 865 SoC இடம் பெற்றுள்ளது. இது ஒரு 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Oxygen OS 10 இயங்குகிறது.

Oneplus 8 Pro மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4510mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 30W fast charging உடன் வருகிறது மேலும் இதில் 30W wireless charger மற்றும் 10W reverse charging Technology இருக்கிறது.

இந்த மொபைலில் நீங்கள் மெமரி கார்டு போட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் 3.5mm audio jackம் இதில் கிடையாது.

இந்த மொபைல் IP68 water resistant உடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தின் OZO ஆடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் 8GB+128GB மற்றும் 12GB+256GB என்கிற இரண்டு வகைகளில் கிடைக்கிறது. Oneplus 8 Pro மொபைல் மூன்று வகையான கலர்களில் கிடைக்கிறது. Onyx Black, Glacial Green & Ultramarine Blue.

Pricing:

ஒன்பிளஸ் 8 மொபைலின் விலை
6GB+128GB - Rs:41,999, 8GB+128GB - Rs:43,999 ($700/€599) மற்றும் 12GB+256GB - Rs:49,999 ($800/699).

ஒன்பிளஸ் 8 Pro மொபைலின் விலை 8GB+128GB - Rs:54,999 ($899/€799) மற்றும் 12GB+256GB - Rs:59,999 ($999/€899).
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.