தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கும் ரியல்மி (Realme C3 Mediatek G70)

Image Credits: Android central

பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்ப்போன்களை அறிமுகம் செய்து வரும் ரியல்மி 'சி' வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ரியல்மி சி3 வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது (second sale).

ரியல்மி சி3 ஸ்மார்ட்ப்போனில் Mediatek G70 Processor இடம் பெற்றுள்ளது. இது முந்தைய தலைமுறை ஸ்மார்ட்ப்போன் (Realme C2) Processor விட பெரிய உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. கேமிங் பிரியர்களுக்கு இது மிக பெரிய சந்தோஷத்தை அளிக்கும்.

இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5இன்ச் IPS LCD HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் minidrop notch இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 20:9 aspect ratio உடன் வருகிறது.

இந்த மொபைலின் பின்புறம் கேமரா வடிவமைப்பு மற்றும் LED flash இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலின் பின்பக்கம் கீழே Realme பிராண்ட்ங் உள்ளது. இதில் 12MP (Primary) + 2MP depth sensor கொண்ட கேமரா பின்பக்கம் உள்ளது. முன்பக்கம் 5MP செல்ஃபி கேமரா இருக்கின்றது.

மேலும் இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது‌ இந்த பேட்டரி 10W சார்ஜர் மட்டுமே support செய்யும் மேலும் இதில் micro USB port இருக்கிறது Type C இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

இறுதியாக இந்த மொபைலின் விலை பற்றி பேசுகையில் 3GB+32GB மாடல் ₹6,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் 4GB+64GB மாடல் ₹7,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் வருகிற பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.