மிரட்ட வரும் Poco X2 ஸ்மார்ட்ப்போன். அப்படி என்ன இருக்குது?


வர பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி Poco நிறுவனம் இந்தியாவில் Poco X2 என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ப்போன் இந்திய ஸ்மார்ட்ப்போன் மார்க்கெட்ல் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Poco X2 ஸ்மார்ட்ப்போனில் 120HZ Refresh Rate கொண்ட டிஸ்பிளே இடம்பெறுகின்றது. இதனால் உங்களுக்கு வேகமான மற்றும் துல்லியமான அனுபவம் இந்த ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளேவில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை.


மேலும் இந்த மொபைலில் 64MP Sony IMX686 சென்சார் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் பின்பக்கம் Quad Camera Setup கொண்டுள்ளது.

Poco X2 ஸ்மார்ட்ப்போன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 730G ப்ராசசர் இயங்குகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இது சீனாவில் அறிமுகமான Redmi K30 மொபைலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்த மொபைலில் Liquid cooling Technology இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி 2020 12:00 மணிக்கு Flipkart இணைய தளத்தில் அறிமுகமாகிறது.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.