அட்டகாசமான விலையில் விவோ Y11 2019 ஸ்மார்ட்ப்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய பிராண்ட் என்கிற பெருமை விவோ நிறுவனத்துக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய நல்ல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வரிசையில் விவோ நிறுவனத்தின் Y11 2019 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

விவோ Y11 ஸ்மார்ட் போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.35inch IPS LCD Pannel இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலின் resolution பற்றி பேசுகையில் இது HD+ resolution உடன் வருகிறது மற்றும் இந்த மொபைலில் Waterdrop notch இடம் பெற்றுள்ளது

மேலும் இந்த மொபைலின் கேமராவை பற்றி பேசுகையில் பின்பக்கம் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. 13MP முதன்மை கேமரா  f/2.2 aperture உடன் வருகிறது மற்றும் 2MP Depth sensor f/2.4 Aperture உடன் இடம்பெற்றுள்ளது. முன்பக்கம் இருக்கிற Waterdrop நாட்ச் 8MP selfie கேமரா கொண்டு உள்ளது.

அடுத்ததாக இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆன்ட்ராய்டு 9 அடிப்படையான Funtouch OS 9 ரன் ஆகிறது.

Processor பற்றி பேசுகையில் இந்த மொபைல்  Qualcomm Snapdragon 439 Processor உடன் வருகின்றது. மேலும் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது.

3.5mm audio jack இந்த மொபைலில் இருக்கிறது மேலும் இந்த மொபைலில் fingerprint sensor பின்புறம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இந்த மொபைலின் விலை பற்றி பார்க்கையில் இது 3GB RAM மற்றும் 32GB internal memory கொண்ட மாடல் Rs:8,990 கடைகளில் டிசம்பர் 25ஆம் தேதி இந்தியாவில் கிடைக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.