Weibo இணையதளம் வழியாக Realme நிறுவனம் அதிகாரப்பூர்வமாக Realme X50 மொபைலின் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இதுதான் Realme நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்ப்போன் என்பது குறிப்பிடத்தக்கது. BBK electronics குழுமத்தின் குழந்தை நிறுவனமான Realme இந்தியாவில் 2019ஆம் ஆண்டு அதிகமான ஸ்மார்ட்ப்போன்களை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற 2020ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி Realme நிறுவனம் X50 5G மொபைலை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது மேலும் இதில் lite version அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Realme X50 5G மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765G Soc 5ஜி சேவையுடன் வருகிறது.
மேலும் இந்த மொபைலில் Dual cutout notch இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Realme X50 5G மொபைலில் ஒரே நேரத்தில் நீங்கள் wifi மற்றும் Mobile data உபயோகிக்க முடியும் என்பது பாராட்டத்தக்கது.
மேலும் இதில் VOOC 4.0 charging Technology இடம்பெற்றுள்ளது. இது 30 நிமிடத்தில் 70% charge ஏறிவிடும் என்று Realme நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Share your opinion about this post friends