அடேங்கப்பா நான்கு செல்ஃபி கொண்ட விவோ கேமராவா?

விவோ நிறுவனம் நேற்றையதினம் புதிய கேமரா வடிவமைப்பு  காப்புரிமை வாங்கியுள்ளது. அதாவது வர இருக்கும் விவோ ஸ்மார்ட்ப்போன்களிள் முன்பக்கம் நான்கு கேமரா இடம்பெறுகின்றது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து பல ஸ்மார்ட்ப்போன் கம்பெனிகள் முழுமையான டிஸ்பிளே பயனர்களுக்கு கொடுக்க முயற்ச்சித்து வருகின்றனர். அந்த வகையில் விவோ நிறுவனத்தின் nex ஸ்மார்ட்ப்போன் முழு திரையுடன் விற்பனைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து விவோ நிறுவனம் தற்போது Punch hole notch டிஸ்பிளே பக்கம் திரும்பியுள்ளது. கடந்த சில நாட்களாக full view டிஸ்பிளே உடன் வரும் ஸ்மார்ட்ப்போன்களில் Pop up கேமரா இடம்பெறுகின்றது. Pop up கேமராவில் சில சிக்கல்கள் இருப்பதால் எல்லா நிறுவனங்களும் Punch hole notch பக்கம் திரும்பியுள்ளது. விவோ நிறுவனமும் punch hole notch டிஸ்பிளே உடன் ஸ்மார்ட்ப்போன்களை 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது முன்பக்கம் மூன்று விதமான Quad கேமரா இடம்பெறுகின்றது.

முதல் ரகம் மேலே இரண்டு பக்கமும் கொஞ்சம் பெரிதாக கேமரா இருக்கிறது (black colour). இரண்டாவது ரகம் முதல் மாதிரியே இருக்கும் ஆனால் punch hole notch இரண்டு பக்கமும் சிறிதாக இருக்கும். இறுதியாக இருக்கும் ரகத்தில் நான்கு பக்க ஓரத்திலும் punch hole notch இடம் பெறுகின்றது (top right, top left, bottom right, bottom left).

இந்த மூன்று விதமான விவோ நிறுவனத்தின் முன்பக்க கேமரா பற்றி உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.