Samsung Galaxy Note 10 Lite மொபைலின் சிறப்பம்சங்கள்

Samsung நிறுவனத்தின் பிரபலமான note seriesன் புதிய lite version (Note 10 Lite) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Samsung Galaxy Note 10 Lite ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பார்க்கையில் இதில் 6.7 inch Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலின் Resolution பற்றி பேசுகையில் இது FHD+ Resolution உடன் வருகிறது. Samsung Galaxy Note 10+ மொபைலில் இருந்த அதே infinity O notch தான் இந்த மொபைலிலும் இடம்பெறுகின்றது.

மேலும் இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Exynos 9810 soc இடம்பெறுகின்றது இது இந்த மொபைலுக்கு ஒரு ஏமாற்றமே. ஏனெனில் இதற்கு முந்தைய தலைமுறையில் இருந்த soc 2020ஆம் ஆண்டு வருவது என்பது ஒரு ஏமாற்றம் தான்.

மேலும் இந்த மொபைலின் கேமரா பற்றி பார்க்கையில் பின்பக்கம் ட்ரிபிள் கேமரா இடம்பெற்றுள்ளது. 12MP Primary f/1.7 + 12 MP ultrawide-angle lens f/2.2 aperture உடன் வருகிறது மற்றும் 12 MP telephoto lens with 2x zoom  f/2.4 aperture உடன் வருகிறது,

மேலும் இந்த மொபைலின் முன்பக்க கேமரா பற்றி பார்க்கையில் தற்போது இருக்கும் நோட் 10 சீரிஸ் கேமராவை விட இதில் ஒரு படி மேலே உள்ள சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது ஆமாங்க இதில் 32MP Selfie கேமரா இடம்பெற்றுள்ளது.

Samsung Galaxy Note 10 Lite மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாக கொண்ட One UI 2.0 இயங்குகிறது. மேலும் இந்த மொபைலில் Optical Indisplay fingerprint sensor இடம்பெற்றுள்ளது.

Samsung Galaxy Note 10 Lite மொபைலில் 4500mah பேட்டரி இடம்பெற்றுள்ளது நீங்கள் இதை சார்ஜ் செய்ய வேண்டுமானால் 25w fast charging adopter out of box (ஃபாக்ஸ் உள்ளே) இருக்கிறது.

இந்த மொபைல் 6GB RAM மற்றும் 128GB internal storage உடன் வருகிறது. இந்த மொபைல் வருகிற ஜனவரி மாதம் 10ஆம் தேதி Europe நாட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இதன் விலை €609/RS:48098.84 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.