OnePlus 7T Pro, 7T Pro McLaren edition போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது


கடந்த வாரம் தான் இந்தியாவில் Oneplus 7T மொபைலை அறிமுகம் செய்தது . மீண்டும் இன்று இந்தியாவில் புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது Oneplus நிறுவனம்.

Oneplus 7T Pro Specifications:

 இந்த மொபைலின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் 6.67 இன்ச் Fluid Amoled displayவுடன் வருகிறது. இது ஒன்பிளஸ் 7 புரோவில் இருந்த அதே டிஸ்ப்ளே தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு Curved ஆன டிஸ்பிளே. இதுவும் 90HZ டிஸ்பிளே தான். Resolution பற்றி பேசுகையில் இது QHD+ Resolutionவுடன் வருகிறது மற்றும் HDR10+ இடம்பெற்றுள்ளது. Oneplus 7T Proவில் பெரிய அப்கிரேட் என்றால் இதன் Processor தான் ஆமாங்க இதில் Qualcomm Snapdragon 855+ Processor இடம்பெற்றுள்ளது. இது இந்த வருடத்தின் Latest Falgship Processor. இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இது இந்த வருடத்தின் டிரெண்டான சோனி ஐமேக்ஸ் 586 48MP கேமராவுடன் வருகிறது + 8MP Telephoto lens மற்றும் 16MP Ultra wide angle lens இடம் பெற்றுள்ளது. இந்த Oneplus 7T Proவில் ஒரு மாற்றம் என்றால் இதன் பேட்டரி ஆமாங்க இதில் 4085mah battery இடம் பெற்றுள்ளது இதை நீங்கள் சார்ஜ் செய்வதற்கு Warp Charge30T இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் சாப்ட்வேர் பற்றி பேசுகையில் இது ஆன்ட்ராய்டு 10 base பண்ண Oxygen Os 10வுடன் வருகிறது. 8GB + 256GB - 53,999

Oneplus 7T Pro McLaren Edition:

Oneplus 7T Pro McLaren editionனில் மிகப்பெரிய அளவில் internals மாற்றம் இல்லை. இந்த மொபைலின் பின்பக்கம் தோற்றம் மற்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்பக்கம் McLaren Racing காரை ரோலிங் மாடலாக கொண்டு வடிவமைக்கப்பட்டதாக Oneplus நிறுவனம் கூறுகிறது. இந்த மொபைலின் UIல்  சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது Papya Orange UI இதில் இடம் பெற்றுள்ளது.

Price and Availability date in India:

இந்த Oneplus 7T Pro மொபைலின் தொடக்க விலை 8GB RAM + 256GB ரூபாய் 53,999‌. Oneplus 7T Pro McLaren edition மாடலின் விலை 12GB RAM + 512GB ரூபாய் 58,999. இந்த Oneplus 7T Pro McLaren edition நவம்பர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கும். Oneplus 7T Pro October 12ஆம் தேதி முதல் Amazonல் விற்பனைக்கு வருகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.