Mi 10, Poco F2 Pro மற்றும் Oppo Find X2 ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கூடிய விரைவில் என மூன்று நிறுவனங்களும் இன்று உறுதியளித்துள்ளனர்.
சியோமி நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் Mi 10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது தற்சமயம் சியோமி நிறுவனத்தின் சிஇஓ மனுகுமார் ஜெயன் தனது டுவிட்டர் பக்கத்தில் Mi 10 ஸ்மார்ட்போனுக்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
Poco Global தனது டுவிட்டர் பக்கத்தில் Poco F2 Pro ஸ்மார்ட்போனுக்கும் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 11 வரும் என்று Poco நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Oppo நிறுவனத்தின் flagship ஸ்மார்ட்போனான Oppo Find X2 மற்றும் Find X2 Pro இரண்டு ஸ்மார்ட்போனுக்கும் இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் ஆண்ட்ராய்டு 11 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends